ஜிபி முத்து எல்லாம் ஒரு நடிகரா? பிரபல இயக்குநரின் ஆதங்கம்!
பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து ஒரு நடிகரே இல்லை என வெங்கட் பிரபு கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜிபி முத்துவின் மீடியா பயணம்
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிக்டாக் ஒன்றில் வீடியோக்கள் செய்து பிரபலமாகியவர் தான் ஜிபி முத்து.
இதனை தொடர்ந்து தனக்கென ஒரு தனி யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் ரீல்ஸ்கள் செய்து பதிவிட்டு அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 6 ல் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் தான் டைட்டில் வின்னர் அடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் முனுமுனுத்த நிலையில் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் எனக்கூறி பாதிலேயே பிக்பாஸை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இப்படியொரு நிலையில் அவருடைய நண்பர்களுக்காகவும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அவர் நடிகர் அல்ல..
இந்த நிலையிர் நடிகர் டேனி ஸ்டூடியோ திறப்பு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.
அதில் டேனி மிகவும் சிறந்த நடிகர். ரக்டருக்கு ஏற்ப ப்ரிப்பேர் செய்து நடிப்பார் என பெறுமையாக பேசினார்.
இதனை தொடர்ந்து, தற்போது பிரபலமாக இருக்கும் ஜிபி முத்துவை நாம் எப்படி ஆரம்பத்தில் பார்த்தோமோ அப்படி தான் இனியும் பார்க்க முடியும். அவர் ஒரு நடிகர் இல்லை. அவரை அப்படி பார்க்கவும் முடியாது.
இவரின் வீடியோக்களும் அப்படி தான் இருக்கின்றது. நீங்கள் ஆபாசம் என்று சொன்ன வீடியோவை இன்னும் நான் பார்க்கவில்லை.
இவர் பட வாய்ப்பிற்காக இப்படி பண்ணுகிறாரா இல்லை சமூக வலைத்தளங்களில் வைரலாவதற்கு முயற்சி செய்கிறார்களா? என தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.