சில்க் ஸ்மிதாவின் காதலை தூக்கியெறிந்த இயக்குநர்.. யார் இந்த வேலு பிரபாகரன்?
மறைந்த திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், சில்க் ஸ்மிதாவின் காதலை தூக்கியெறிந்தார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மறைவு
இயக்குனர் வேலு பிரபாகரன் கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்தார்.
சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவங்கிய வேலு பிரபாகரன் இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களில் பிரபலமாக இருந்தார்.
கடந்த 1989ஆம் ஆண்டு நாளைய மனிதன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் இறப்பு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வேலு பிரபாகரன் திருமண வாழ்க்கை
இந்த நிலையில், வேலு பிரபாகரன் சினிமாவில் பிரபலமாக இருந்த காலத்தில் நடிகை ஜெயதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை, விவாகரத்தில் முடிந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய 60வது வயதில் நடிகை ஷெர்லி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
நடிகை ஷெர்லி, வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.
சில்க் ஸ்மிதா காதலை மறுத்தாரா?
இதற்கிடையில், இயக்குனர் வேலு பிரபாகரன் ஜெயதேவியை திருமணம் செய்யும் முன்னர் நடிகை சில்க் ஸ்மிதா அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பே ஜெயதேவிக்கு வாக்குறுதி கொடுத்ததால் சில்க் ஸ்மிதாவின் காதலை ஏற்க மறுத்து விட்டார் என்ற கதையும் உள்ளது.
“நான் நினைத்திருந்தால் சில்க் ஸ்மிதாவின் காதலை ஏற்றிருக்கலாம். ஆனாலும் ஜெயதேவிக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக சில்க் ஸ்மிதாவிற்கு நோ சொல்லிவிட்டேன்..” பேட்டியொன்றில் மனம் விட்டு பேசியிருக்கிறார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |