அதிதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு: கண்டிஷன் போட்ட ஷங்கர்...
நடிகை அதிதிக்கு 2 வருடங்களில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை அதிதி
தமிழ் சினிமாவில் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குனர் தான் ஷங்கர் இவரின் மகள் தான் தற்போது வளர்ந்து வரும் நடிகை அதிதி ஷங்கர்.
இவர் விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் மாவீரன் திரைப்படமும் வெளியாகியிருந்தது.
மேலும், தற்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதில் மட்டுமல்லாமல் இவர் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் பாடும் பாடல்களும் பட்டித் தொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவிற்கு பிரபலமாகி விடுகிறது.
திருமண ஏற்பாடு
இந்நிலையில், நடிகை அதிதிக்கு அவரது தந்தை இயக்குநர் ஷங்கர் இரண்டு வருடங்கள் மட்டும் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
தற்போது அதிதிக்கு 26 வயதாகின்ற நிலையில், அப்பாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வேகவேகமாக படங்களில் நடிக்க கிளம்பிவிட்டார். மேலும், இவர் தற்போது அதர்வாவின் தம்பியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கைவசம் இன்னும் 2 படங்கள் வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |