நடிகை அதிதி 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? படிப்பிலும் டாப்பாம்!
முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நகை அதிதி பத்தாம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் தகவல் வெளியாகியுள்ளத.
நடிகை அதிதி
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள நிலையில். நடிகர் கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்த தற்போது வெளியாகி வெற்றிப்படமாக சென்று கொண்டிருக்கின்றது.
அதிதியின் நடிப்பு, நடனம் மட்டுமின்றி இப்படத்தில் மதுர வீரன் என்கிற பாடலையும் யுவனுடன் சேர்ந்து பாடி இருந்தார். பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பும் இந்த படம் தற்போது வரை ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
விருமன் படத்திற்கு பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்பகள் நடிகை அதிதிக்கு குவிந்து வருகின்றது.
அதிதியின் 10ம் வகுப்பு மதிப்பெண்
இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அவர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கிலத்தில் 91, பிரெஞ்சு பாடத்தில் 97, கணிதத்தில் 97, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 91 என மொத்தம் 475 மதிப்பெண்களை எடுத்து பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி இருக்கிறாராம்.
இவ்வாறு படிப்பில் சிறந்து விளங்கிய அதிதி மருத்துவ படிப்பு முடித்து பட்டமும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.