7 முறை தவறான முடிவு எடுத்த செல்வராகவன்- பதைபதைக்க வைத்த நொடிகள்
நடிகர் தனுஷின் உடன்பிறந்த சகோதரரான இயக்குனர் செல்வராகவனின் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.
இவரின் இயக்கத்தில் திரைக்கு வந்த “ ஆயிரத்தில் ஒருவன்” படம் மற்றும்“ புதுப்பேட்டை” ஆகிய திரைப்படங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. செல்வராகவனின் தம்பியை வைத்து தான் முதல் திரைப்படமான 'காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தை எடுத்தார்.
தனுஷினால் வந்த வரவேற்பை எடுத்து கொண்டு தான் இன்றும் நீங்காத இடத்தை சினிமாவில் பெற்றுள்ளார்.
இயக்குநராக இருந்த செல்வராகவன் விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
7 முறை தவறான முடிவிற்கான முயற்சி
இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசுகையில், “ வாழ்க்கையில் உலகம் என்ன நடந்தாலும் சில கஷ்டங்களை சிலரால் கடக்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களில் நானே 7 முறை தவறான முடிவுக்கு முயன்றிருக்கிறேன். ஆனால் எனக்கு நிறைய நேரங்களில் பொறுமையாக இரு.. என்ற குரல் கேட்கும்.
இப்படி நடந்து 10 நாட்களுக்கு பின்னர் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். அந்த சமயங்களில் தவறான முடிவு செய்திருந்தால் இதையெல்லாம் மிஸ் பண்ணிருப்போமே என தோணும். தற்கொலை செய்து கொள்பவர்களின் மனநிலை அடுத்த ஜென்மத்திலாவது நிம்மதியாக பிறக்க வேண்டும் என்று தான் இருக்கும்.
பிரச்சினைகள் அதிகமாகும் பொழுது சண்டை போடக்கூடாது. “ஆமாம்” என்று இருந்துவிட்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். தீர்வு கிடைக்காத பிரச்சனையே கிடையாது” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |