தனுஷ் அண்ணனும் விவாகரத்தா? அடுத்தடுத்த டுவிட்களால் பரபரப்பு- குழப்பத்தில் ரசிகர்கள்
பிரபல இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி சில புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இயக்குநர் பயணம்
தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை' என்ற திரைபடத்தின் மூலம் இயக்குநர் செல்வராகவன் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்குநரராக மட்டுமன்றி சில திரைப்படங்களில் நடிகராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.
வாழ்க்கையை திருப்பி போட்ட பதிவு
இந்நிலையில் இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் தமது வாழ்க்கையில் நடக்கும் சில விடங்களை கருத்துகளாக பதிவேற்றுவார்.
இதன்படி, சமிபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,“தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம்.
நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த பல பிரபலங்கள் அவரிடம் என்ன நடந்தது சார் என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022
மறைமுகமாக பிரிவை அறிவிக்கும் பிரபலம்
இதனை தொடர்ந்து அவரின் அன்பு மனைவி கீதாஞ்சலி குழந்தையுடனும் அவரின் குடும்பத்துனருடனும் தனியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “ 2022-ன் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த ஆண்டு வேடிக்கையாக குடும்பத்தினருடன் அற்புதமான கழிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரிவின் துயரங்களை தனித்தனியாக பதிவேற்றிக் கொள்கிறார்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.