15 மாத குழந்தை உட்பட 14 பேருக்கு கொரோனா... பரிதவிப்பில் பிரபல இயக்குனர்
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், மேயாத மான் மற்றும் ஆடை திரைப்படங்களின் இயக்குநர் ரத்னகுமார், தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை தன் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, மாமியார் என சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தேரினர் என்றும் கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்றும் இயக்குநர் ரத்னகுமார் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய ரத்னகுமார், தனுஷை வைத்து அடுத்தப் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு? ?
— Rathna kumar (@MrRathna) May 29, 2021