பிரபல இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார்
வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இன்று காலமானார்

இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்
இவர் பிரபல இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனராக ரமேஷ் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 49. இவருடைய இழப்பு தற்போது அனைவர் இடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது இறுதி சடங்குகள் கோவை மாவட்டம் சுகுனாபுரத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமாக உள்ளார்.
சுப்ரமணியத்திற்கு எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.
இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை.

தமிழ் திரையுலகில் அவர் இயக்கிய வில் அம்பு படம் 2016 இல் வெளிவந்தது. இதில் ஹரிஷ் கல்யான், ஸ்ரீ, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார்.
இவரின் மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |