விஜய் எல்லாம் ஒரு நடிகரே கிடையாது... தப்பு தப்பா நடிக்கிறாரு: விமர்சிக்கும் தேவயானியின் கணவர்
விஜய்க்கு நடிக்கத் தெரியாது எனவும் விஜய் ஒரு நடிகரே இல்லை எனவும் தேவயானியின் கணவன் ராஜ்குமாரன் விளாசி தள்ளியிருக்கிறார்.
விஜய்க்கு நடிக்கவே தெரியாது
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கும் வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி தங்கள் நடிப்பால் முன்னேறியவர்கள் தான் கமல், ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை விட சரத் குமார் தான் சிறந்த நடிகர் என கூறியிருக்கிறார் ராஜகுமாரன்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் நடிகர் விஜய் பற்றியும் அவரின் திரைப்படம் குறித்தும் பேட்டி ஒன்றில் விமர்ச்சித்திருக்கிறார். பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,
வாரிசு படத்தில் கூட விஜய் ஒழுங்கா நடிக்கவே இல்லை. சும்மா தப்பு தப்பா நடிச்சு இருக்கிறார் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் மட்டும் தான் ஒழுங்காக நடித்திருக்கிறார்.
ஒரு தந்தையிடம் இப்படியா ஆணவத்தோடு நடத்துக் கொள்ளவது நிஜத்தில் அவர் எப்படி இருக்கிறாரோ அதை திரையில் காட்டக் கூடாது அதையெல்லாம் வேறு எங்காவது காட்டிக் கொள்ள வேண்டும்.
இதைப் பார்த்து மற்றவர்களும் இப்படித் தான் நடந்துக் கொள்வார்கள். அதற்கு நாங்களே ஒரு முன் உதாரணமாக இருக்க கூடாது.
நான் சரத்குமார் வச்சி சூரிய வம்சம் திரைப்படத்தை எடுத்தேன். அந்த திரைப்படத்தில் சரத்குமார் சொல்வார், நான் சொத்தாக நினைக்கிற தெய்வமே வீட்டுக்குள்ள தான் இருக்குன்னு அதுதான் ஒரு சிறந்த உதாரணம் என விஜய்யை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
விஜய், அஜித், விக்ரம், கமல், ரஜினி இவர்கள் யாரும் நல்ல நடிகர்கள் கிடையாது இவர்களுக்கு மேல் சரத்குமார் தான் இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |