பட்டு புடவையில் தேவதையாய் ஜொலிப்பவர் மிஷ்கின் மகளா? புகைப்படம் பார்த்து குழப்பமான ரசிகர்கள்
இயக்குனர் மிஷ்கின் இளம் பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மிஷ்கின்.
இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு 'அஞ்சாதே' என்கிற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்வசப்படுத்திக் கொண்டார்.
இவரின் சினிமா பயணம் சிறப்பாக இருந்தது. இதனால் ஃபிலிம் ஃபார் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுக் கொண்டார்.
பின்னர் 'நந்தலாலா' என்கிற படத்தை இயக்கிய மிஸ்கின், அந்த படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான சில விருதுகளை பெற்றார்.
மிஷ்கின் வைரல் பதிவு
இந்த நிலையில் நடிப்பு இயக்கம் என்பதை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், என பன்முகத் திறமையோடு விளங்கும் மிஷ்கின் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகிய லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டது மட்டுமல்லாது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
அந்த வரிசையில் மிஸ்கின் ஒரு பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. அத்துடன் இது உண்மையில் மிஷ்கின் மகள் தானா அல்லது ரசிகையா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |