CM விஜய் பற்றி 24 வருட இரகசியத்தை போட்டுடைத்த இயக்குநர் லிங்குசாமி
முதல்வர் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருடன் நடந்த ஒரு விடயத்தை பற்றி தற்போது இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்துள்ளார்.

முதல்வர் விஜய் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருந்தவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய அரசியல் கட்சி ஒன்றை அறிவித்தார். மேலும் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை எனவும் அறிவித்திருந்தார். என்னதான் தற்போது விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் என்றாலும் சினிமாவில் அவர் பற்றிய இரகசியங்கள் இன்னும் வந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி முதல்வர் விஜய் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் 24 வருடமாக வெளியில் பெரிதாக எங்கும் சொல்லாத ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

ஏவிஎம் சரவணன் 2002ஆம் ஆண்டில் வெளிவந்த படம், ரன். இந்த படத்தை ஏவிஎம் சரவணனிடம் கூறிய போது, அவர் இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும், இதனால் விஜய்யின் தந்தையிடம் கதையை சொன்னதாகவும் லிங்குசாமி கூறினார்.

லிங்குசாமி ரன் கதை சொல்லியிருந்த சமயத்தில், விஜய் ‘தமிழன்’ திரைப்படத்தில் பிசியாக இருந்திருக்கிறார். மேலும், ‘பொண்ணுங்க பின்னாடி சுத்துற கதை விஜய் சாருக்கு செட் ஆகாது வேண்டாம்’ என அmவருடைய தந்தை சொன்னதால், ரன் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடியாமல் போயிருக்கிறது என அவர் கூறி உள்ளார்.

இந்த ரன் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மீன் நடித்து மாஸ் ஹிட் ஆனது மேலும் லிங்குசாமி விஜய்யை சண்டக்கோழி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்த முயற்ச்சியும் நிறைவேறாமல் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |