தந்தையின் மினி வெர்ஷனாக ரங்கராஜ் மகன்! ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புகைப்படம்
ஜாய் கிரிஸில்டா தனது மகன் செய்த சேட்டையை புகைப்படமாக வெளியிட்டு தந்தையின் மினி வெர்ஷன் என கூறியுள்ளார்.
ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தம்பதிகள் சில வருடத்திற்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜாய் கிரிஸில்டா கர்ப்பமானார்.
ரங்கராஜ் சமையல் கலைஞராகவும், நடிகராகவும் அசத்தி வருகின்றார். இவர் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் முதல் மனைவிக்கு தெரியாமல் ஆடை வடிவமப்பாளரான ஜாய் கிறிஸில்டாவை திருமணம் செய்தார். இதனை வெளியே கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஜாய் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி தனது திருமண புகைப்படத்தினை வெளியிட்டார். பின்பு இவர்களின் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஜாயை விட்டு விலக நினைத்த ரங்கராஜ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
உறுதியான டி.என்.ஏ
பிறக்கும் குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து என்னுடையது என்று நிரூபித்தால் அதனை நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறினார். ஆனால் பரிசோதனைக்கு வராமல் எஸ்கேப் ஆகிய நிலையில், ஒருவழியாக டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது.
குறித்த குழந்தை ரங்கராஜ் குழந்தை என்று தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்த நிலையில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்கும், ஜாய்க்கும் சமூக வலைத்தளங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டது.

இருவரும் மாறி மாறி பதிவுகளை வெளியிட்டு மறைமுகமாக பேசி வந்தனர். பின்பு அதனை நிறுத்திக் கொண்டனர். ரங்கராஜ் தற்போது இருவரிடமும் சுமூகமாக இருந்து வருகின்றார்.
கிறிஸில்டா சமீபத்தில் கூட, தனது கணவர் குழந்தை மீதும், தன் மீதும் பாசமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் தனது மகன் ராகா ரங்கராஜின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில் கையில் தட்டு, டம்ளர் என வைத்து விளையாடி செய்துள்ளார் மகன். இந்த புகைப்படத்தில் ரங்கராஜின் முக சாயலும் வெளிவர ஆரம்பித்துள்ளது.
இந்த புகைப்படத்திற்கு அப்பாவின் மினி வெர்ஷன் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கிறிஸில்டா. இவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் சுத்திபோடுங்க என்றும் கூறிவருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |