“நல்ல சினிமாவில் உயிர்ப்பாய் இருப்பேன்”... இயக்குனர் பாக்யராஜ் அலுவலகம்
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த 27-ஆம் தேதி மாரடைப்பால் மறைந்தார். அவரின் மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல திரைப்பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 28-ஆம் தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது அவரது அலுவலக சமூக வலைதள கணக்கில் இருந்து ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் அலுவலகம் கடிதம்
அந்தக் கடிதத்தில், “மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் மிகப் பெரிய மகிழ்ச்சி உள்ளது” என்று நான் எழுதிய வரி என் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியாக மாறியது.
எனக்கு அன்பு செலுத்திய கோடிக்கணக்கான ரசிகர்கள், தாய்மார்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவரையும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்களாகவே கருதுகிறேன். அதனால் தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்புக்காக தானமாக விட்டுச் செல்கிறேன். அதை பத்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

என் மகன் சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் ஆதரவும் கைதட்டலும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் இடத்தில் ரசிகர்களாகிய நீங்கள் இருந்து, சாந்தனுவை வெற்றியடைய உதவ வேண்டும்.
நான் உங்கள் அனைவரையும் என் கண்கள் வழியாக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். கண்தானம் செய்தாலும், மனிதன் மறைந்தாலும் பார்வையாக ஒருவர் வாழ முடியும். உடல் ஒரு நாள் எரியவோ அல்லது புதையவோ செய்யப்படும். ஆனால் அன்பும் நினைவுகளும் தான் நிலைத்திருக்கும்.
என் இறுதி பயணத்தில் நீங்கள் காட்டிய அன்பும் கண்ணீரும் கருணையும் என் ஆன்மாவுக்கு அமைதியை அளித்தது. இனி நான் நல்ல திரைப்படங்களிலும், நல்ல கதைகளிலும், நல்ல மனிதநேயத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
From the OFFICE of
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) June 30, 2026
Director #KBhagyaraj sir pic.twitter.com/ikSx6KwOMt
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |