சிம்பு தனுஷ் பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி! வெளியான புகைப்படம்; பதறிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவில், விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தாராக நடித்து பிரபலமானவர் ஜி.வி.குமார்.
திரைப்பட இயக்குநர், மற்றும் நடிகர் என பன்முகம் காட்டி வந்தவர் ஜி. எம். குமார் ஆவார்.
இவர் குறிப்பாக தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் முதல் படைப்பான அறுவடை நாள் திரைப்படத்தை சிவாஜி புரொடக்சன் தயாரித்திருந்தது.

இதில் பிரபு, பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன்பின் பிறகு பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் என வெறும் மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.

ஐசியு பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை குறித்து அவருக்கு என்ன ஆகியது என மருத்துவ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
அவர் விரைந்து குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.