மனோஜ் இல்லாத இந்த வீடு வெறிச்சோடி கிடக்கிறது... பாரதிராஜாவின் தம்பி வேதனை
இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் உயிரிழந்த நிலையில் பாரதி ராஜாவின் உடன்பிறந்த தம்பி ஜெயராஜ் சில விடயங்களைக் குறித்து பகிர்ந்துள்ளார்.
பாரதி ராஜா
பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சமீபத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். மகனின் உயிரிழப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் பாரதி ராஜா இருந்து வருகின்றார்.
இந்நிலையில் பாரதி ராஜாவின் உடன்பிறந்த தம்பியான ஜெயராஜ் சில விடயங்களைக் குறித்து பகிர்ந்துள்ளார். மனோஜ் உயிரிழந்த போது அவரது உடல்நிலைக் குறித்த தகவலை ஜெயராஜ் தான் வெளியில் கூறி வருந்தினார்.
சித்தப்பா ஜெயராஜ் உடன் நடிகர் மனோஜ் பல விடயங்களைக் குறித்து பேசியுள்ளார். பேசும் போது சினிமாவைக் குறித்து மட்டுமே இருவரும் பேசுவார்களாம்.
ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட் கிடைத்திருந்தால் மனோஜ் நிச்சயமாக ஜெயித்திருப்பான் என்றும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் மனோஜின் மிகப்பெரிய ஆசை என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னைப் பற்றியும், அண்ணன் பாரதி ராஜா குறித்தும், மகன் மனோஜ் குறித்தும் பல விடயங்களை சினிஉலகம் சேனலுக்கு பேட்டியாக அளித்துள்ளார். குறித்த காட்சியினை தற்போது காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |