மகள் காதலை ஏற்க மறுத்த பாக்கியராஜ்..பேரன் பிறப்பால் மாறிய குடும்ப சூழ்நிலை
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தன்னுடைய மகள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தமைக்கான காரணத்தை ஓபனாக பகிர்ந்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ். இவர், நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
பாக்யராஜுற்கு ஒரு மகன் மட்டுமல்ல இவருக்கு சரண்யா என்கிற அழகிய மகளும் இருக்கிறார். இவர் வெளிநாட்டில் படிக்கும் போது அங்கிருந்தவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதல் கைக்கூடவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பல தடவைகள் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது.
பேரன் பற்றிய ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்
தற்போது 39 வயதாகும் சரண்யா , இதுவரையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக சரண்யா வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் பங்கு பெற்று வந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். அத்துடன் ஆடையணிகலன்கள் சம்பந்தமான பொருட்களை செய்து வருகிறார்.
மகளின் காதல் குறித்து பாக்யராஜ் பேசுகையில், “ என் மகளின் காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜாதி, மதம், பணம், எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. இதனால் என்னுடைய மகள் அவருடைய குடும்பத்துடன் தனியாக இருந்தார்.
நாங்களும் அப்படியே கோபத்தில் விட்டுவிட்டோம். ஆனால் அவர் கர்ப்பம் ஆகிட்டான்னு சொன்னதும், மனசு தாங்க முடியல. அப்புறம் பூர்ணிமா தான் கூட போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்ன உடன் நான் ஓடிப் போய் பார்த்தேன்.
நான் தான் கையில முதல்ல அவனை வாங்குனேன். இப்போ அவன பாக்காம என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது...” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது, ஆனால் பாக்யராஜ் ஏன் மகளின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |