இயக்குனர் பாலா, தனுஷ் விவாகரத்து! பிண்ணனியில் வெளியான சுவாரஷ்ய தகவல்
இயக்குநர் பாலாவும், மனைவியும் பிரிந்தத நிலையில் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது.
தற்போது தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமான அதே ஆண்டு தான் பாலாவுக்கும், முத்துமலருக்கும் திருமணம் நடந்த தகவலை ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் பாலாவும், முத்துமலரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்கிறார்கள் என்கிற நல்ல செய்தியை எதிர்பார்த்த நேரத்தில் இப்படி ஒரு விவாகரத்து தகவல் வந்திருக்கிறது.
திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுவிட்டனர்.
பாலாவுக்கும், முத்துமலருக்கும் திருமணமான அதே ஆண்டு தான் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடந்தது. அவர்களும் பிரிந்துவிட்டார்கள். முறைப்படி விவாகரத்து பெறாவிட்டாலும் மீண்டும் சேரும் எண்ணம் இல்லையாம்.
பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் எல்லாம் இப்படி பிரிந்து கொண்டிருக்கிறார்களே என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.