டி-ஷர்ட்டில் ஒரு பேண்ட் - புதிய சொகுசு கார்... பாலிவுட்டில் மாஸ் காட்டும் அட்லீ
இன்று இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாக ஹேிந்தி திரைப்படம் போபி ஜான் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அட்லீயின் புதிய சொகுசு கார் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்து இன்று குருவை மிஞ்சிய சிஷ்யனாக திரைத்துரையில் அசத்திவருபவர் தான் அட்லீ குமார்.
தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ராஜா ராணி. முதல் படமே மாபெரும் வெற்றியடைந்தது. மிகப்பெரிய வெற்றி கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இவர் மீது வைக்கப்பட்டது.
வேறொரு படத்தை பார்த்து அப்படியே காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் அட்லியை விமர்சித்தவர்கள் அனைவருக்கும் தனது தொடர் வெற்றிகளின் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றார் அட்லி.
ராஜா ராணி திரைப்படத்தில் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.
4 ஆண்டு இப்படத்திற்கு உழைத்த அட்லீக்கு ஜவானன் திரைப்படம் பெரியளவில் ஹிட் அடித்தது. உலகளவில் இந்த திரைப்படம் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
மிகவும் குறுகிய காலத்திலேயே சினிமாவில் பல ஆண்டுகள் இருக்கும் இயக்குநர்கள் சாதிக்க முடியாத உச்சத்தை அட்லீ விரைவாகவே அடைந்துவிட்டார்.
தற்போது தயாரிப்பாளராக பரிமாணம் எடுத்திருக்கும் அட்லீ, வருண் தவான் நடிப்பில் இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இது தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த திரைப்படம் கிறிஸ்மஸ் வெளியீடாக இன்று திரைக்கு வந்து வெற்றிநடை போடுகின்றது.
அட்லீயின் புதிய கார்
இந்த நிலையில், இயக்குனர் அட்லீ புதிதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கிய தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
இந்த காரின் மதிப்பு ரூ. 3 கோடி என சொல்லப்படுகிறது. தனது புதிய காரில் அட்லீ வந்த இறங்கிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |