மக்களை ஈர்த்த பிக்பாஸ் குரல் யாரடையதுன்னு தெரியுமா? வைரலாகும் காணொளி
ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தகாரரின் புகைப்படம் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிகன்றது.
பிக்பாஸ்
தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் நிகழ்சி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.
உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகமாக கடந்து தற்போது 8 ஆவது சீசன் அனல் பறக்கும் திருப்பங்களுடன் அரங்கேறி வருகின்றது.
கடந்த 7 சீசன்களையும் உகல நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 ஆவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவழங்கி வருகின்றார்.
பிக் பாஸ் 8 77 நாட்களை கடந்துள்ள நிலையில் 12 போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் உள்ளனர். கடந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் குரல் யாருடையது?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலரும் இந்த குரல் யாருடையது என்பது குறித்து அதிகமாக இணையத்தில் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் குரல் கொடுப்பவர் யார் என்பது குறித்து தகவல்கள வெளியாகியுள்ளது. சாஷூ சதிஸ் சாரதி என்பவர் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர்.
இவர் நடிகரும், commentary செய்வதிலும் ஆர்வம் கொண்டவராம். இவர் தான் பிக் பாஸ் தமிழுக்கு குரல் கொடுத்து வருகின்றார் என்ற தகவல் தற்போது இணையத்தில் அவர் பேசிய வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களும் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |