குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள்
பார்த்திபன், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தபோது, அவருக்கு ஒரு தனித்துவமான பரிசை வழங்கினார். த்ரிஷாவுடன் விஜய் பொதுவெளியில் தோன்றியது குறித்து நடிகர் தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகு, இது அவர்களின் முதல் சந்திப்பாகும். குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
முதல்வர் விஜய்- பார்த்திபன்
தளபதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரைச் சந்தித்து வருகின்றனர்.

மோசமான நிலையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற பல நடவடிக்கைகளை விஜய் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நேற்று ஆர்ஜே பாலாஜி விஜய்யை சந்தித்து பேசி இருந்தார். கருப்பு படம் தொடங்கி இருந்ததே அவரிடம் தான் என விஜய்யை பற்றி கூறி இருந்தார் அவர். இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.

மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள்
அந்த ஓவியத்துடன், பார்த்திபன் ஒரு குறிப்பையும் இணைத்திருந்தார், அதில் விஜய்யை உலக அரசியலில் ஒரு தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு திருமணத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாகக் காணப்பட்டது குறித்துப் பார்த்திபன் கருத்து தெரிவித்த பிறகு, விஜய்யை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். (த்ரிஷாவை குந்தவை வீட்டிலேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என அவர் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது)

பார்த்திபன் பரிசு
விஜய்க்கு பரிசாக ஒரு ஓவியம் ஒன்றை நடிகர் பார்த்திபன் கொடுத்துள்ளார். அதில் சினிமாயணம் to CMஆசனம்! அராஜகமற்ற ஆட்சியைத் தர, அரகஜா திலகமிட்டு-விஜய பேரரசராக அரியனையை அலங்கரிக்கும் -உலக அரசியல் அதிர்WIN முதல்வருக்கு வாழ்த்துகள்! iறியருடன், பார்த்தியன் தேதி: என்றும்! என எழுதியுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |