மைனா மீது செம கோபத்தில் ரக்ஷிதா கணவர்! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 6 மற்ற சீசன்களை காட்டிலும் செம Boringஆக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
காரணம் இதில் கலந்துகொண்ட பலரும் பாதுகாப்பாக விளையாடிவருகிறார்கள், அசிம், விக்ரமன், தனலட்சுமி மற்றும் ஷிவின் தவிர மற்ற எவருமே ஒழுங்காக விளையாடவில்லை என்றே கூறப்படுகிறது.
ரக்ஷிதா பற்றி மைனா கூறியது என்ன?
இந்த சீசனில் சரவணன் மீனாட்சியில் இணைந்து நடித்த ரக்ஷிதா- மைனா இருவருமே கலந்து கொண்டுள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளாக இருவருமே நல்ல நண்பர்கள் என ரசிகர்கள் கருதிய நிலையில் அவ்வளவாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ரக்ஷிதா பற்றி பேசிய மைனா, என்னுடைய திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதால் ரக்ஷிதா என் மீது கோபமாக இருந்தார், நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதையே அவர் தான் தேர்வு செய்வார் என புறம்பேசினார்.
இந்நிலையில் ஏலியன் டாஸ்கில் கூட ரக்ஷிதாவிடம் சங்கடப்படும்படியான கேள்விகள் கேட்டார் மைனா.
Lets expose this idiot? #mynaa#myna#rachitha #biggbosstamil6 pic.twitter.com/vyUuAbUUou
— Rachitha Ashu (@Always_Rachitha) November 26, 2022
ரக்ஷிதா கணவரின் பதிலடி
பிக்பாஸில் ரக்ஷிதாவின் செயல்களுக்கு, ரக்ஷிதாவை சுற்றி நடக்கும் விடயங்களுக்கு அவ்வப்போது பதிலளிக்கும் தினேஷ் இன்ஸ்டாவில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 10 வருடங்களாக நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் நபர் இப்படி செய்யலாமா? மோசமான கேள்விகளை கேட்கிறார், அதனையும் மிக ஒழுக்கமாக கடந்து சென்றீர்கள், வேற லெவலில் இருந்தது.
வென்று வாருங்கள், உங்களுக்கு வாக்களிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.