ரக்ஷிதாவின் குணத்தை புட்டு புட்டு வைத்த கணவர் தினேஷ்! ராபர்ட் மாஸ்டரின் சூழ்ச்சி
பிக்பாஸ் வீட்டுக்குள் ரக்ஷிதா- ரொபட் மாஸ்டர் தொடர்பில் ரக்ஷிதாவின் முன்னாள் கணவரான தினேஸ் கொடுத்த பேட்டி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸில் ரக்ஷிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 16 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் முக்கிய போட்டியாளராக அசீம், ஜனனி, ரஷிதா மற்றும் ரொபட் மாஸ்டர் என பலர் இருக்கிறார்கள்.
இந்த சீசனில் அசல் கோளாறு - நிவாஷினிக்கு அடுத்தப்படியாக ரொபட் மாஸ்டர் - ரக்ஷிதா விவகாரம் தற்போது மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரக்ஷிதாவின் முன்னாள் கணவரான தினேஷிடம் பேட்டியொன்றை எடுத்துள்ளது.
ராபர்ட் மாஸ்டர் காதல் விவகாரம்
இந்த பேட்டியில், ரக்ஷிதா சுமார் 16 வருடங்கள் சினிமாத்துறையில் இருக்கிறார். அவர் யாரையும் காதலிக்கவில்லை, ரக்ஷிதாவிற்கு தெரியும் யாரிடம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று.
அவரே அவரை பார்த்துக் கொள்வார், மற்றும் ராபர்ட் மாஸ்டர் அவராக முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லையென்றும், அதற்காக வனிதா விஜயகுமார் உதவி செய்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் நிலைத்து இருப்பதற்காக ஒரு தவறான கதையை உருவாக்குகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.