ரக்ஷிதா இப்படிபட்ட பெண்ணா? ரக்ஷிதா குறித்து மனம் திறந்த தினேஷின் தாய்... பிரிவுக்கு இதுதான் காரணமாம்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த தினேஷ் மற்றும் தன்னுடைய மருமகள் ரக்ஷிதாவின் பிரிவு குறித்து தினேஷின் தாயார் கண்ணீருடன் கூறி உள்ள தகவல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சீரியல் நடிகை ரக்ஷிதா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் ரக்ஷிதா.
பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே, இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் சமூக வளைதளங்களில் பேசு பொருளாக காணப்படுகின்றது.
ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது தன்னுடைய அம்மா - அப்பா பற்றிய பேசிய இவர் தினேஷ் குறித்து வாய் திறக்கவில்லை இதற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவது உறுதியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற ரஷிதா, எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியேறினார். இவரை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இவருடைய விளையாட்டு நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், கண்டிப்பாக பிக் பாஸ் பைனல் வரை வருவார் என்று நம்பப்படுகிறது. பைனலிஸ்ட் போட்டியாளர்கள் லிஸ்டில் கண்டிப்பாக தினேஷ் இருப்பார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.
ரக்ஷிதா குறித்து தினேஷின் தாய்...
இந்நிலையில், தினேஷின் பெற்றோர் தன்னுடைய மருமகள் ரக்ஷிதா குறித்து தற்போது தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறுகையில். "ரக்ஷிதாவை எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அவர் எங்கள் அனைவர் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார்.
ரக்ஷிதா என் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து சிலர் பொறாமை பட்டுள்ளனர். என்னை அம்மா... அம்மா... என்று மிகவும் அன்பாக பார்த்துக் கொள்வார். எனக்கு பெண் குழந்தைகள் இல்லாததால் நானும் அவரை ஒரு மகளாக தான் பார்த்தேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
தினேஷின் தாய், இவர்கள் பிரிவின் காரணம் குறித்தும் குறிப்பிடுகையில், எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், ரக்ஷிதா இவ்வளவு நாள் எங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டார். ஆனால் இவ்வளவு நாள் ஏன், இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கே தெரியவில்லை.
ரக்ஷிதா மிகவும் நல்ல பொண் அவரது கேரக்டரும் அப்படி தான். இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை பற்றி எந்த ஒரு தவறான தகவல் வந்தாலும் கண்டிப்பாக நாங்கள் நம்ப மாட்டோம்.
அவருக்காக காத்திருப்போம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |