இறந்த கணவரை கட்டிப்பிடித்து கதறிய நடிகை- நெஞ்சை உருக்கும் வைரல் புகைப்படம்!
பாலிவுட் பிரபல நடிகர் திலீப் குமார் உடல் நலக் குறைவு காரணமாக 98 வயதில் காலமானார். இவரின் மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திலீப் குமார் வீட்டிற்கு சென்றபோது சாய்ரா பானு அவர் மீது சாய்ந்து அழுததை பார்த்து பலரும் கண் கலங்கினார்கள்.
திலீப் குமாரின் முகத்தில் கையை வைத்துக் கொண்டு சீனியர் நடிகரான தர்மேந்திரா கண்ணீர் விட்டதும் பார்த்தவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த நிலையில், சாய்ரா பானு கடைசியாக ஒரு முறை தன் கணவரின் முகத்தோடு முகம் வைத்து கதறி அழுதபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் கண் கலங்குகிறது. மேலும், திலீப் குமாருக்கும், சாய்ரா பானுவுக்கும் திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகிவிட்டது.
தங்களுக்கு குழந்தை இல்லை என்பது ஒரு குறையாக இல்லை என அவர்கள் தெரிவித்தனர். நான் வாழ்வதற்கான காரணத்தை கடவுள் என்னிடம் இருந்து பறித்துவிட்டார் என்பது தான் திலீப் குமார் இறந்த பிறகு சாய்ரா பானு தெரிவித்தது ஆகும்.
Holding her love for the last time.. This breaks my heart ?? .. pic.twitter.com/M8SBFJBwf1
— Simi Garewal (@Simi_Garewal) July 9, 2021