இறந்த முதியவருடன் புதைக்கப்பட்ட 1.5 கோடி ருபாய் கார்... இதற்கு காரணம் என்ன?
சீனாவில் இறந்த முதியவருடன் 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் கார் புதைக்கப்ப்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மறித்த முதியவர்
பொதுவாக உலகத்தில் மரணம் என்பது இயற்கையான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் மரணத்துடன் சேர்ந்து நடைபெறும் சில சம்பவங்கள் பேச்சு பொருளாக மாறுகின்றது.
சீனாவில் முதியவர் ஒருவரின் இறப்பு பரபரப்பாக பேசப்படுகின்றது. தற்போதைய காலத்தில் கார், பைக் என்பது பெரும்பாலான நபர்களுக்கு அவ்வளவு பிடித்தமான பொருளாக மாறுகின்றது.

இவைகள் உயிரற்ற பொருளாக இருந்தாலும், இதன் மீதுள்ள மோகத்தினால் வாங்கவும் செய்கின்றனர். ஆனால் இவற்றினை இறக்கும் வரை பயன்படுத்த முடியும், அதன் பின்பு குடும்பத்தினர் விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்.
ஆனால் சில குடும்பத்தில் உடனடியாக விற்கவும் செய்து வருகின்றனர். ஆனால் சீனாவில் நடந்த சம்பவம் மிகவும் வினோதமாகவே இருக்கின்றது.
காருடன் புதைக்கப்பட்ட முதியவர்
ஒருவர் இறக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களையும் போட்டுவிடுவார்கள். அந்த வகையில் சீனாவில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதி சடங்கின் போது அவரது குடும்பத்தினர் 1.5 கோடி மதிப்புள்ள Mercedes Benz S450L காரையும் அவர் அருகிலேயே புதைத்துள்ளனர்.

அதாவது ஆடம்பர கார்களை சேகரிக்கும் பழக்கம் குறித்த முதியவருக்கு இந்துள்ளதால், அவரது ஆன்மாவை சந்தோஷப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்துள்ளனர்.
ஆனால் எந்தவொரு அனுமதி இல்லாமல் காரை புதைத்தற்காக சீன அரசு அக்குடும்பத்தினருக்கு அபராதம் விதித்துள்ளது.
இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |