முட்டைக் குழம்பு இப்படி பொரித்து வைத்துப் பாருங்க... ஒரு பருக்கை சோறு கூட மிஞ்சாது
முட்டைக் குழம்பு முட்டையைப் பொரித்து வித்தியாசமான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 6
வெங்காயம் - 3
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறு துண்டு
தயிர் - அரை கப்
செய்முறை
முதலில் முட்டையை அவித்து தோல் நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் அவித்து வைத்திருக்கும் முட்டை, மிளகாய் பொடி, மல்லிபொடி, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றினை உரலில் நன்றாக தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மிளகாய், மல்லி பொடிகள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
முட்டை பொரித்த மீதம் இருக்கும் எண்ணெய்யில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்பு தட்டி வைத்திருக்கும மிளகாய் சாந்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தொடர்ந்து தயிர் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறிய பின்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து இறக்கவும். இறுதியாக மல்லித்தழை சேர்த்துக்கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
