கல்லீரலை சேதப்படுத்தும் உணவு வகைகள்.. இப்போதே குறைப்பது நல்லது!
தற்போது இருக்கும் வேகமான வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகளவிலான நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
கணவரை பிரிந்த பெண்... 10 ஆண்டுக்கு பின்பு சேர நினைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! சோகத்தில் நீயா நானா
அந்த வகையில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பசி என்று டீ கடைகளுக்கு செல்லும் போது கடைகளில் இருக்கும் துரித உணவுகளை டீயுடன் வாங்கி உண்பார்கள்.
இதனால் அதிக எடை, நீரழிவு நோய், சோர்வு, தூக்கம், வாந்தி இப்படியான பல நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அத்துடன் வேலைப்பழு அதிகமாக இருப்பதால் வீட்டில் சமைப்பதற்கு நேரம் இல்லாமல் குழந்தைகளுக்கு கூட அதனை தான் சாப்பிட கொடுக்கிறார்கள்.
இதனால் குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றை தாண்டி துரித உணவு பழக்கங்களினால் கல்லீரல் பாதிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் கல்லீரலை சேதப்படுத்தும் உணவுகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.
கல்லீரலை சேதப்படுத்தும் உணவுகள்
1. ஹோட்டலுக்கு சென்று பர்கர், பீட்சா சாப்பிடுவதை முற்றிலும் குறைப்பது நல்லது. இது மனித வாழ்க்கையில் பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
2. அதிகப்படியான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்வதால் காலப்போக்கில் எடை அதிகரிப்பு ஏற்படும். இதனால் உங்களுக்கு பிடித்தமான வேலையை கூட செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும்.
3. இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் கடைகளிலிருந்து சாப்பிடும் உணவால் ஏற்படுகின்றன.
4. இரவு வேளைகளில் துரித உணவுகளை எடுத்து கொள்ளும் போது வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.
5. உடலில் மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக கல்லீரல் இருக்கின்றது.
6. குடிப்பழக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் கல்லீரல் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால் வேகமாக களைப்படைய வாய்ப்பு இருக்கின்றது.
7. தவறான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை இவை இரண்டும் கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்கும். இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது.
8. சுத்திகரிகப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டு பண்ணும்.
9. துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது. இதனால் எவ்வளவு முடியுமே அந்தளவு வீட்டில் செய்யப்படும் சாப்பாட்டை சாப்பிடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |