பவதாரணியின் மண வாழ்க்கை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்.. இதெல்லாம் உண்மையா?
பவதாரணியின் மண வாழ்க்கை குறித்து பயில்வான் விமர்சனம் செய்துள்ளார்.
பவதாரணி இறப்பு
தமிழ் சினிமாவில் இனிமை மிகுந்த பாடல்களுக்கு சொந்தகாரியாக பவதாரணி பார்க்கப்படுகிறார்.
இவர் இளையராஜாவின் மகளும் யுவன், கார்த்திக் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவர் குரலில் 30 படங்களுக்கு மேல் பாடல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 10 படங்களுக்கு தனியாக இசையமைத்தும் கொடுத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து “மயில் போல பொண்ணு ஒண்ணு..” என்ற பாடலுக்கு தேசிய விருதையும் தன்வசப்படுத்தினார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இலங்கையில் ஆயுள் வேத சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார்.
திருமண வாழ்க்கை சரியாக இல்லை..
இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் விமர்சகர் பயில்வான், “ பவதாரணி சினிமாலயா பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனை காதலித்தார். இவர்கள் இளையராஜாவின் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் இல்லற வாழ்க்கை சரியாக இல்லை.
இதனை தொடர்ந்து பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கரைத்துவிடலாம் என்ற முயற்சியில் இறங்கிய போது அதற்குள் அது புற்றுநோயாக மாறிவிட்டது.
இதனை கடந்த வருடம் ஜூலை மாதம் பவதாரணியின் பிறந்தநாள் அன்று தனக்கு புற்றுநோய் இருப்பதை சிரித்து கொண்டே குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்....” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |