விமானங்களிலும் ஹாரன் இருக்காம்... பலருக்கும் தெரியாது
மற்றைய வாகனங்கள் போல விமானத்திலும் ஹாரன் இருக்காம். இதை எப்போது எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை பார்க்கலாம்.
விமானங்களின் ஹாரன்
பொதுவாக விமானங்களில் செல்லும் போது அதில் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு மிக முக்கியமானது. இதில் ஏதாவது தவறு அல்லது பயணிகளின் பாதுகாப்பில் பிரச்சனை வரும் போது விமானத்தில் இருக்கும் தானியங்கி அலாரம் உடனடியாக எச்சரிக்கும்.
இந்த அலாரம் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று விமானங்களில் ஹாரன் உள்ளது தான். வழக்கமாக இந்த ஹாரன் கார்கள் பேருந்துகள் முச்சக்கர வண்டி இருசக்கர வண்டி போன்றவற்றில் காணப்படும்.
ஆனால் விமானத்தில் ஹாரன் பயன்படுத்துவது இப்போது தான் பலருக்கும் தெரியவரும். வீதியில் செல்லும் வாகனங்களுக்கு ஹாரன் பயன்படுத்துவதற்கான காரணம் நம் செல்லும் போது பக்கத்து வாகனங்களை எச்சரிப்பதற்காக தான்.
நாம் ஹாரன் பயன்படுத்தினால் நமக்கு வாகனங்கள் வழி விடும் இதனால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அப்போ விமானத்தில் ஹாரன் ஏன் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி வரும்.
விமானத்தில் ஹாரன் ஏன் பயன்படுத்துகிறார்கள்?
விமானங்கள் காற்றில் பயணிப்பவையாகும். இதனால் இதற்கு ஹாரன் தேவையில்லை. விமானம் செல்லும் போது மட்டும் தான் காற்றில் பறக்கும். மற்றைய நேரங்களில் தரையில் இருக்கும்.
தரையில் இருக்கும்போது அல்லது பராமரிப்பின் போது, ஹாரன் மிக முக்கியமான தொடர்பு கருவியாக உள்ளது. விமானங்களில் தரைப்பொறியியலாளர்கள் இருப்பார்கள்.
அவர்களிடம் தொடர்பு கொள்ள விரும்பும் போது ஹாரனை அடித்து ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தலாம். இது "நான் பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறும் ஒரு வகையான சமிக்ஞையாகும்.
அதாவது, காக்பிட்டில் உள்ள விமானிக்கும் தரையில் உள்ள பொறியாளருக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்புக்கான ஒரு ஊடகமாக ஹாரன் செயல்படுகிறது.
இது தவிர காக்பிட்டில் அமர்ந்திருக்கும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தரையில் உள்ள குழுவினரிடம் ஒரு வேலை செய்விக்க அல்லது குறிப்பிட்ட வேலையை நிறுத்த விரும்பினால் அவர்களின் கவனத்தை ஈர்க்க முதலில் ஹாரனை பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஹாரனுடைய ஒலி அலாரம் போன்ற சத்தத்தை தான் தரும். இதில் மிக முக்கியமானது விமானம் பறக்கும் போது ஹாரன் வேலை செய்யாது.
ஏனெனில், அந்த நேரத்தில் சிக்னலிங் அமைப்பு முற்றாக அணைக்கப்படும். இந்த விமானங்களில் உள்ள ஹாரன்கள் வாகனங்களைப் போல சாலை எச்சரிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. தொடர்பு பரிணாமத்திற்காக வடிவமைகப்பட்டவையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |