அமர்நாத் குகையில் இருக்கும் பனி லிங்கம்- பக்தர்கள் குவிய காரணம் என்ன?
பொதுவாக அமர்நாத் யாத்திரை என பலரும் பேசி கேள்விப்பட்டிருப்போம்.
இந்த அமர்நாத் குகை கோவில் ஸ்ரீ நகரிலிருந்து சரியாக 141 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் நமது ஊர்களில் புராண கதைகளுடன் கூடிய கோயில் மற்றும் இடங்கள் இருக்கும். இந்த வரிசையில் அமைந்திருக்கும் கோயில்கள் அமர்நாத் குகை கோயிலும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஏனெனின் இந்த கோயிலுக்கு சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணம் கூறுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமர்நாத் குகை பற்றி மேலதிக தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அமர்நாத் குகை சிறப்புக்கள்
1. பக்தர்கள் இங்கு குவிவதற்கான முக்கிய காரணம் இங்கு இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. அத்துடன் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
2. அமர்நாத் கோயிலில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுவதாக கூறப்படுகின்றது.
3. கோயிலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் பக்தர்கள் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 61 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும் அதில் கலந்து கொள்ளலாம்.
4. குகையை நோக்கிச் செல்லும் போது பல்வேறு வகையான புராணக்கதைகளை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்து தான் இந்த குகையை அடைந்ததாக புராணக்கதை உள்ளது.
5. பனிலிங்கத்தை தரிசிக்க நினைக்கும் பக்தர்கள் கால்நடையாக அல்லது குதிரைகளின் உதவியுடன் சென்று பார்வையிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |