மொட்டை அடித்துக் கொண்ட இளம் பெண்! வைரல் வீடியோவின் பின்னணி
கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா மேனன் என்ற இளம்பெண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தேசிய ஊடகங்கள் வரையில் கவனம் பெற்றது.
குறித்த வீடியோவில், கோவிலில் அமர்ந்தபடி தனது நீண்ட மற்றும் அடர்த்தியான தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொள்வது பதிவாகியுள்ளது. வீடியோவின் மீது, "என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகமே பலரது கவனத்தை ஈர்த்தது.

வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதைப் பார்த்த பலரும், பெற்றோர் கட்டாயப்படுத்தும் திருமணத்தில் இருந்து தப்பிக்கவே கீர்த்தனா மொட்டையடித்துக் கொண்டார் என்றும், வரன் பார்ப்பதைத் தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் நினைத்து கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.
சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான கருத்துகக்களை பெற்றது.
கீர்த்தனா கொடுத்த விளக்கம்
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தனா தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், தனக்கு எந்தவித கட்டாயத் திருமணமும் நடைபெறவில்லை என்றும், வீடியோவில் இடம்பெற்ற வாசகம் வெறும் நகைச்சுவைக்காகவும் சமூக ஊடக உள்ளடக்கமாகவும் சேர்க்கப்பட்டதுதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் திடீரென மொட்டையடித்தால் மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை சுவாரஸ்யமாகக் காட்டவே அந்த வாசகத்தை பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும், தனது தோற்றத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்ததாகவும், அதற்காக தனது தாயின் முழு சம்மதத்துடனும் ஆதரவுடனும் கோவிலில் முடி காணிக்கை செலுத்தியதாகவும் கீர்த்தனா விளக்கமளித்தார்.
மேலும், பெண்கள் மொட்டையடிப்பதை சமூகம் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு பெண் தலைமுடியை அகற்றியதற்காகவே இவ்வளவு பெரிய சர்ச்சை உருவானது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்ள்ளார்.

இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு மாறாக, இந்த சம்பவம் கட்டாயத் திருமணத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது குடும்ப வற்புறுத்தலின் விளைவோ அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |