Diabetic Retinopathy: நீரிழிவு நோயாளிகளே கண்களில் இந்த பிரச்சனையா? அலட்சியம் வேண்டாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கண்பாதிப்புகளில் ஒன்றான நீரிழிவு ரெட்டினோபதியைக் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்கள் கண் பார்வை பிரச்சனை ஏற்படும். உயர் ரத்த சர்க்கரை அளவு விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களுக்கு சேதம் விளைவிக்கும் போது நீரிழிவு ரெட்டினோபதி உண்டாகிறது.
நீரிழிவு ரெட்டினோபதி
நீரிழிவு ரெட்டினோபதி என்பது கண் நோயாகும். இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
விழித்திரையில் இருக்கும் ரத்த நாளங்களை பாதிக்கும் நிலை ஆகும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்நோயானது ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் இருக்கும். ஆதலால் முறைவான மருத்துவ பரிசோதனை செய்து முன்கூட்டியே கண்டறிவது சிறந்ததாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களுக்கு சேதம் உண்டாக்கும் இது proliferative diabetic retinopathy பெருக்க நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் nonproliferative பரவாத நீரிழிவு ரெட்டினோபதி ஆகும்.
கண்களில் மிகப்பெரிய சேதம் ஏற்படும் வரை எந்தவொரு அறிகுறியும் காட்டாத இந்நோயானது, நீண்ட காலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தாமல் இருந்தால் அதிகமாகவே பரவுகின்றது.
நீரிழிவு ரெட்டினோபதியின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள்
நீரிழிவு ரெட்டினோபதிக்கு ஆரம்ப அறிகுறிகள் எதுவும் கிடையாது. முக்கியமாக விழித்திரை பாதிப்பிற்கு பின்பே இந்நோய் கண்டறியப்படுகின்றது.
விழித்திரை இரத்த நாளங்கள் சேதம் ஆனாலும் பார்வையில் சிக்கலை ஏற்படுத்தாது என்பதால் இதனை சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.
ஆனால் பரிசோதனைக்கு கண் மருத்துவரை அணுகுவதன் மூலம் இதை கண்டறிந்துவிட முடியும்.
ஏனெனில் வழக்கமான விரிவான நீரிழிவு விழித்திரை பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறியப்படுகிறது.
கண்களில் மாற்றங்கள் விரைவாக உண்டாகலாம். அதனால் வழக்கமான பரிசோதனையை அலட்சியம் செய்யும் போது நீரிழிவு ரெட்டினோபதி ஆரம்ப அறிகுறிகளை கவனியாமல் போகலாம்.
மங்கலான பார்வை
மங்கலான பார்வை என்பது சில விடயங்களை நாம் தெளிவாக பார்க்க முடியாமல் இருப்பது. இவை பார்வை கூர்மையாகவும், சரியாகவும் இல்லை என்பதை குறிக்கின்றது. சில தருணங்களில் கண் கூச்சம் ஏற்படுவதுடன், நாளடைவில் கண்பார்வை மிகவும் மோசமாகவு மாறிவிடும்.
நீரிழிவு நோயாளிகளிடம் மட்டும் அல்ல பெரும்பாலான கண் பிரச்சனைகளில் மங்கலான பார்வை ஓர் அறிகுறியாக சொல்லப்படும் என்றாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது கவனிக்க வேண்டிய அறிகுறியாக இருக்கின்றது.
உற்றுநோக்குவதில் சிக்கல்
கண்களை மையப்படுத்தி ஒரு விடயத்தை பார்க்கும் போது அது சிக்கல் ஏற்பட்டால், ஒளிவிலகல் பிழையின் காரணமாக இருக்கலாம். கண் இமையின் வடிவம் உள்ளே வரும் வெளிச்சம் சரியாக பெறாமல் இருக்கும்.
ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சரியாக கவனம் செலுத்தாத போது உற்றுநோக்குவதில் சிக்கல் காணப்படும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த பிரச்சனை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
கண்களில் மிதவைகள் போன்ற புள்ளிகள்
கண் பார்வையின் போது தென்படும் கருப்பு மற்றும் சாம்பல் நிற புள்ளிகள், சிலந்தி வலைகள் போன்று பிரச்சனைகள் காணப்படும். இவை கண்களை நகர்த்தும் போது அவை சேர்ந்தே நகரும், அதனை நேரடியாக பார்க்க முயற்சிக்கும் அது நகர்ந்து செல்வது போன்று தோன்றும்.
கண்களில் உள்ள ஜெல்லி போன்ற பொருள்கள் திரவமாக்கப்பட்டு சுருங்குவதால் உண்டாகும் வயது தொடர்பான மாற்றங்களால் இந்த கண் மிதவைகள் ஏற்படுகின்றன.
கொலாஜன் இழைகளின் சிதறிய கொத்துகள் உருவாகி விழித்திரையில் சிறிய நிழல்களை உண்டு செய்யலாம்.. இந்த நிழல்கள் மிதவைகள் என்று அழைக்கப்படுகின்றது. கண் மிதவை பிரச்சனை காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி விழித்திரை பாதிப்பை தவிர்க்கவும்.
வண்ணங்கள் அறிவதில் சிக்கல்
வண்ணங்களை பிரித்துப் பார்ப்பதில் சிக்கல் ஏற்படும். அதாவது இதனை வண்ண குருட்டுத்தன்மை என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நிற குருட்டுத்தன்மை அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இவர்களுக்கு பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் நிழல்களை வேறுபடுத்தி பார்க்கவோ, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களை வேறுபடுத்தி பார்க்கவோ முடியாது.
வன்ணங்கள் அறிவதில் சிக்கல் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரை அணுகுவதன் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை தவிர்க்கலாம்.
கண்களில் புள்ளிகள்
பார்வையில் கரும்புள்ளிகள் பிரச்சனை காணப்படுவது இந்நோயின் அறிகுறியாகும். அதாவது வயது, விழித்திரை, கண்ணீர், வீக்கம் அல்லது பிற கண் நிலைகளின் விளைவாக இந்த கரும்புள்ளிகள் தோன்றலாம்.
இவை வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் பிற நிலைமைகள் பார்வையின் மையத்தில் பெரிய இருண்ட அல்லது கரும்புள்ளியை உண்டு செய்யலாம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த புள்ளியை கண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
குருட்டு புள்ளிகள் இருந்தால்
வாகனத்தை சுற்றியுள்ள பகுதியை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். அதாவது வாகனத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் இருக்கும் விளிம்புகள், ஓட்டுநரின் பார்வை இருட்டாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் வாகனத்தில் செல்லும் போது எதிர் வரும் வாகனங்கள் சுற்றி எதுவும் தெரியவில்லை எனில் அது நீரிழிவு ரெட்டினோபதி அறிகுறியாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |