நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் அரிசி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் அரிசி உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த வகையான அரிசியை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
அரிசியில் அதிகமான கார்போஹைட்ரேட் இருக்கும் நிலையில், இவை செரிமானமாகி உடம்பில் குளுக்கோஸாக மாறுகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்கின்றது.
ஆதலால் நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் குறைவாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு வேகமாக அதிகரிக்கச் செய்யும் என்பதை கிளைசெமிக் இன்டெக்ஸ் குறிக்கிறது. பொதுவாக, வெள்ளை அரிசியின் GI அதிகமாக இருப்பதால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இவை செரிமானத்தை மெதுவாக்கி ரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாகவே அதிகரிக்க செய்கின்றது.
எந்த உணவை சாப்பிட்டாலும் அளவு முக்கியம். அரிசியை சாப்பிடும் போது அதன் அளவை கட்டுப்படுத்த வேண்டும். அரிசியை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கச் செய்யும்.
மொத்தத்தில் சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எந்த வகையான அரிசியை, எவ்வளவு அளவில் சாப்பிடலாம் என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தீர்மானிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |