சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கும் லவங்க பட்டை? எப்படி சாப்பிடுவது
நம் முன்னோர்கள் காலத்தில் 60 வயதுக்கு மேலே தான் சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கும்.
ஆனால் இப்போது 20 வயது நபர்களுக்கு கூட சர்க்கரை நோய் வந்துவிடுகிறது, காரணம் முறையற்ற உணவுப்பழக்கமும், ஆரோக்கியமற்ற துரித உணவுகள், உடற்பயிற்சி ஏதும் இல்லாமல் இருப்பது என பலவற்றை குறிப்பிடலாம்.
இதற்காக என்னதான் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் சித்த வைத்தியப்படி குறைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
நம் வீடுகளிலேயே பயன்படுத்தப்படும் வெந்தயம், கொய்யா மர இலைகள், கருஞ்சீரகம் போன்றவை சர்க்கரை அளவை குறைக்கும்.
லவங்கபட்டை சர்க்கரையை குறைப்பது எப்படி?
ஒரு கிராம் லவங்கப்பட்டையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு வைத்து ஊற வைக்கவேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து அதை நன்றாக கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.
மற்ற பயன்கள்
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் லவங்கப்பட்டை, வெறும் மணத்திற்காக மட்டுமின்றி இதில் பல நன்மைகளும் அடங்கியுள்ளன.
இது கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
சளி, காய்ச்சலுக்கு எதிராக போராடும் லவங்கப்பட்டை, வலிப்பு நோய்க்கும் தீர்வாகிறது.
இது நம் உடலுக்குள் சென்று கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துவிடுகிறது.
குறிப்பு
வயிற்றுப்புண் , எரிச்சல் இருப்பவர்கள் அளவோடு பயன்படுத்த வேண்டும்.