சுகரை ஓட ஓட துரத்தியடிக்க தினமும் இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!
சர்க்கரை நோய் தீவிரமானால் உயிரையே இழக்கக்கூடும்.
சர்க்கரை நோய் என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை.
இது பல காரணிகளால் இருக்கலாம். இந்த நோய் இருப்பவர்கள் உடனே அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஓர் அற்புத மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்தை எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை - 6
- செலரி வேர் - 300 கிராம்
தயாரிக்கும் முறை
முதலில் துருவிய செலரி வேரை ஒரு மூடியுள்ள சிறு பாத்திரத்தில் போட்டு அத்துடன் எலுமிச்சைகளைப் பிழிந்துவிட்டு மூடி வைக்க வேண்டும்.
பின் பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதனுள் அந்த சிறிய பாத்திரத்தை வைத்து அடுப்பில் இட்டு நீரை சூடேற்ற வேண்டும்.
நீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 2 மணிநேரம் குறைவான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
பின்பு சிறு பாத்திரத்தின் மூடியை திறக்காமல் இறக்கி வையுங்கள்.
நன்கு குளிர்ந்த பின் அதனை ஒரு ஜாரில் போட்டு சேரிகரித்துக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்.
எச்சரிக்கை
நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரை எடுப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் பின்னர் எடுத்து கொள்ளுங்கள்.