கோடை வெயிலில் நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட கூடாது
நீரிழிவு நோயாளிகள் கோடைகாலத்தில் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்களிலும் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சிலர் அதிக தாகம் எடுப்பதால், சர்பத், கரும்புச் சாறு மற்றும் குளிர் பானங்களையும் அருந்துகிறார்கள்.
இந்த விஷயங்கள் நீரிழிவு நோயாளிகளின் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் கோடையில் என்ன சாப்பிடக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் கோடையில் சாப்பிட கூடாத உணவுகள்
கோடைக்காலத்தில், குளிர் பானங்கள், கரும்புச் சாறு போன்ற இனிப்பு பானங்கள் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும்.
இனிப்பு பானங்கள்: கடுமையான வெப்பம் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும் என்பதால், உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.
ஆனால் சர்க்கரைகள் அதிகம் உள்ள பானங்களை (கோலா, பீர் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் அல்லது பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்ற சர்க்கரை சிரப் சார்ந்த உணவுகள் ) உட்கொள்வது கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
அவற்றை எலுமிச்சைப் பழம், ஐஸ்கட் டீ, குளிர் காபி, மோர், ஸ்மூத்திகள் போன்றவற்றை குடிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சக்கரையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
பழச்சாறுகள்: நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்கக்கூடிய பழச்சாறுகளை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் இருக்கும் சக்கரை அளவு உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை தவிர்த்து சக்கரை நோயாளிகள் முழு பழங்கள் அல்லது காய்கறிகளை உட்கொள்வது சிறந்தது. ஏனெனில் அவை உடலுக்கு நார்ச்சத்தை வழங்கி சக்கரையை கட்டுக்குள் வைக்கும்.
உறைந்த இனிப்பு வகைகள்: பெரும்பாலான உறைந்த இனிப்பு வகைகள் அல்லது ஐஸ்கிரீம்களில் சர்க்கரை உள்ளடக்கம் மற்றும்
கலோரிகள் அதிகமாக உள்ளன. மேலும் அவை இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யலாம். எனவே உறைந்த ஐஸ்கீறிம் போன்ற இனிப்புகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பேக்கரி பொருட்கள்: பிஸ்கட் மற்றும் குக்கீஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா இருப்பதால் அவற்றை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இதை விட வீட்டில் செய்யப்படும் பார்லி மா பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
