நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? உஷாரா இருங்க
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் நீரிழிவு நோயினால் பல உணவுப்பொருட்களை சாப்பிடலாமா என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது.
நீரிழிவு
நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும்.
உனவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
நீங்கள் சாப்பிடும் உணவு உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.
இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத் தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.
இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.
வாழைப்பழம் சாப்பிடலாமா?
நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை பலரும் உணவுக்கு பின்பும், இரவு நேரத்திலும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள் சில வாழைப்பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களில் சிலருக்கு சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது. எனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூவம் பழம், ரஸ்தாளி பழங்களில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
பச்சை வாழைப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஏனெனில் அதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். எனவே நார்ச்சத்து நிறைவாக உள்ள செவ்வாழை, பச்சை வாழை தாராளமாக சாப்பிடலாம்.