நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளலாமா?
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் நீரிழிவு நோய் ஆகும். இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் உணவு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
அந்த வகையில் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழும்பும். இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
இதற்கான பதில் உருளைக் கிழங்கு சாப்பிடக்கூடாது என்பதே. பொதுவாக உணவில் மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி, சாதம், கிழங்கு வகைகள் மற்றும் கோதுமை உணவை குறைத்துக் கொள்ள வேண்டும். நமது உணவில் கலோரிகளை குறைத்துக் கொண்டால் உருளைக்கிழங்கை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
வேர்க் காய்கறியான உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளது. அரிசி மற்றும் கோதுமை உணவுகளை சாப்பிடுகின்ற நபர்களுக்கு அதே அளவு ஸ்டார்ச் உருளைக்கிழங்கு இருக்கும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறப்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளில் மாவுச்சத்து உணவுகளை குறைத்துக்கொண்டு, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். அதே உருளைக்கிழங்களை சைடிஷ்ஷாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மாவுச்சத்து உணவு அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.
தென் மாநிலப் பகுதிகள் மற்றும் கிழக்கு மாநில பகுதிகளில் அரிசி சோறு பிரதான உணவாக உள்ளது. அதேபோல வட மாநிலங்களில் கோதுமை உணவு பிரதான உணவாக உள்ளது.
இவ்வாறு மாவுசத்து உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், உருளைக்கிழங்கு போன்ற இதர ஸ்டார் சத்துக் கொண்ட உணவுகளை தவிர்த்து விட்டு பச்சை காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |