நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்குமா வாழைப்பழம்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் பெருகி வரும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உடலின் அனைத்து உறுப்புகளையும் சிறிது சிறிதாக பாதிக்க தொடங்கி அதனை செயலிழக்க செய்யும் தன்மையுடையதாகும்.
இந்த நோயைத் தவிர்க்க, அதன் அறிகுறிகளை அடையாளம் காண வேண்டியது அவசியம். அதன் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.
டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் உடனடியாகத் தோன்றும், அதேசமயம் டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் தாமதமாகவே தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்படும் சில உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
அரிசி
அரிசி என்பது ஒரு தானியமாகும், அதை உண்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம், ஆனால் இந்த ஆற்றல் தரும் உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அரிசியில் காணப்படுகின்றன. ஆனால், அவற்றுடன் கார்போஹைட்ரேட்டின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பழமாகும், பல மருத்துவர்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன, மேலும் அதில் இயற்கையான சர்க்கரையின் அளவும் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
டம்ளர் நீரில் சிறிது உப்பு: கஷ்டம் நீங்கி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கொட்டும்
தேன்
சர்க்கரையை விட தேன் சிறந்த தேர்வாக இருந்தாலும், சில சமயங்களில் அதில் உள்ள அதிக சர்க்கரை அளவின் காரணமாக அது தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதை கவனமாக உட்கொள்ள வேண்டும்.
ட்ரை ப்ருட்ஸ்
திராட்சை, அத்திப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும் இதனை குறைவாக சாப்பிடலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் சில ட்ரை ப்ருட்ஸ் இல் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது, இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள்