சுகர் பிரச்சினை இருப்பவர்களுக்கு சூப்பரான உணவு... அதிகமா சாப்பிடலாம் பயமே வேண்டாம்
நமது அன்றாட உணவாக எடுத்துக்கொள்ளும் தானியங்களில் சிறுதானியம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது. அதிலும் கேழ்வரகு அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.
அரிசியை விட குறைந்த சர்க்கரை சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாக ஏறாமல், மிகச் சீராக இருக்கின்றது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் தவறாமல் கேழ்வரகு அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது கேழ்வரகு இட்லியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - ஒன்றரை கப்
இட்லி அரிசி - 2 அரை கப்
உளுந்து - 1 கப்
கேரட் துருவியது - 1/4 கிலோ
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இட்லிக்கு தேவையான பொருட்களான கேழ்வரகு, அரிசி, உளுந்து இவற்றினை 5 மணிநேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஊறிய பின்பு மாவு பதத்திற்கு நன்று அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு வெந்தயத்தினை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இரவு முழுவதும் புளிக்க வைத்த பின்பு, அடுத்த நாள் காலையில் உப்பு மற்றும் துருவிய கேரட், மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறிய பின்பு இட்லி அல்லது தோசை செய்து சாப்பிடவும்.