நீரிழிவு நோயாளிகள் பாலக் கீரை சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மை
நீரிழிவு நோயாளிகள் கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தாலும் பாலக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை ஏற்படுத்துமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள்
இன்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகும் நீரிழிவு நோயாளிகள், சில உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் நிச்சயம் நோயிலிருந்து விடுபடலாம் என்பதை அறிந்து கொள்ளவும்.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், கோவக்காய், கீரை வகைகள் இவற்றினை உணவுகளோடு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பாலக் கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்து நிறைத்துள்ளதால் அந்த கீரையை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பாலக் கீரை நீரிழிவு நோயாளர்களுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
ஆம் பாலக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த சோகை நோய் வராமல் வராமல் தடுப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.