நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிட்டால் நிகழும் அதிசயம்
இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடல் எடை இவற்றினால் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமே உணவு கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டியுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் உலகின் மிக இனிப்பான பழமான அத்திப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக நிரூபணமாகி வருகிறதாம்.
இப்பழம் இனிப்பாக இருந்தாலும் இதில் உள்ள அனைத்து சத்துக்களும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகின்றது.
அத்திப் பழத்தில் 63 சதவீதம் இனிப்பு இருக்கும் நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கின்றது. அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினையும் குறைகின்றது.
நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அத்தி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
நிபுணர்கள் கூறுவது என்னவெனில், 3 முதல் 4 அத்திப்பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றினை மென்று சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைப்பதுடன், இளமையாகவும் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |