நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது?
ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழத்தில் நீரிழிவு நோயாளிகள் எதெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம் ஆகும். அந்த வகையில் சத்துக்கள் அதிகம் கொண்ட வாழைப்பழங்களில் எதையெல்லாம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
எந்த பழங்கள் சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள் மா, பலா, வாழை ஆகிய பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், குளுக்கோஸ் அதிகம் உள்ள பூவன் பழம், ரஸ்தாளி ஆகிய பழங்களை மட்டுமே சர்க்கரை வியாதிகள் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், அதிக நார்ச்சத்து உள்ள பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது.
image: Pinterest
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சிறியளவில் எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தில் உள்ள பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்றும், எனவே வாழைப்பழத்தை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |