சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகலாமா? பலரின் கேள்விக்கு பதில் இதோ
ஆரோக்கிய பானமாக அனைவருக்கும் பிடித்த இளநீர் நீரிழிவு நோயாளிகள் பருகலாமா என்பதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் இளநீர் பருகலாமா?
பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள்.
அதிலும் இளநீர் வெயில் காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவகாலங்களிலும் மக்கள் அருந்துகின்றனர். ஏனெனில் இதில் உள்ள மினரல்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
வெப்ப காலங்களில் உடம்பில் வெப்பத்தை தனிக்கக்கூடிய பானமான இளநீர், உடம்பிற்கு தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இளநீரில் கலோரிகள் அதிகம் உள்ளது என்றும் அது மட்டுமின்றி 10 கிராம் சர்க்கரை மட்டுமே இளநீரில் இருப்பதால் தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இளநீரை குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இளநீரில் வேறு சில நன்மைகள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குடிக்கலாம் என்றும் ஆனால் அதிகமாக குடித்தால் உடல் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |