இளம் வயதினரை தாக்கும் நீரிழிவு நோய்... காரணம் என்ன?
இன்றைய காலத்தில் இளம்வயதினரை அதிகமாக நீரிழிவு நோய் தாக்கிவரும் நிலையில், இவற்றை வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவினை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது தற்போது அவசியமாகியுள்ளது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
அதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் பாதித்துவந்த நிலையில், தற்போதுள்ள காலக்கட்டத்தில் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் நீரிழிவு
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும் டைப் 2 என்ற சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதற்கான முக்கிய காரணம் என்னவெனில், சுறுசுறுப்புடன் வாழ்க்கையில் இல்லாமல் இருப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவது...
இவ்வாறு இளம்வயதில் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக சேலை செய்யவும், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் வேண்டும்.
மேலும் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிப்படைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |