வாயில் இப்படி இருந்தால் கொடிய சர்க்கரை தாக்கி இருக்கலாம்! உடனே மருத்துவரிடம் ஓடுங்கள்
சர்க்கரை நோய் என்ற பெயரை கேட்டாலே அலறுகிறோம்.
உண்மையில் இது வரும் முன் காப்பது மிக மிக நல்லது என்றாலும் தவிர்க்க முடியாத சூழலில் இதன் அறிகுறிகளை உணர்ந்து இந்நோயை கட்டுக்குள் வைப்பதும் அவசியம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள் வாயிலும் தெரியும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
அப்படி தெரியக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்

வாயில் தொற்று
சர்க்கரை வியாதி வந்தால் வாயில் தொற்றுப் பிரச்சினையும் கூடவே ஏற்படும். அதாவது ஒரு வகையான ஈஸ்ட் தொற்று வாயைத் தாக்கும்.
நமது உமிழ்நீரிலிருந்து இந்த ஈஸ்ட் தொற்று ஏற்படும்.
வெள்ளைப் படலம் போல இது நாக்கில் காணப்படும். வாயின் உட்புறச் சுவரிலும் இது படரும். இதனால் உணவுப் பொருட்களின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகவும்.

பல் ஆரோக்கியமற்ற நிலை
நமது பல் ஆரோக்கியத்தை சர்க்கரை வியாதி பாதிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான முறையில் பல் துலக்குவது, ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது ஆகியவற்றின் மூலம் நமது பல் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

அடிக்கடி தாகம்
அதிக அளவிலான தாகத்தைத்தான் பாலிடிப்சியா என்கிறார்கள். உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்.
நா வறட்சி ஏற்படுவது போல இருக்கும். அப்படி இருந்தால் பாலிடிப்சியா என்று அர்த்தம். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், உங்களது ரத்தத்தில் அதிக அளவில் குளுகோஸ் கூடியிருக்கிறது என்று பொருள்.
அதாவது உங்களுக்கு டயபடிஸ் வந்திருக்கிறது என்று பொருள்.
சர்க்கரை நோய் அறிகுறிகளில் தொண்டை வறட்சி
டைப் 2 சர்க்கரை வியாதி வந்தவர்களுக்கு xerostomia எனப்படும் தொண்டை வறட்சி பிரச்சினை உருவாகும்.
சாதாரண முதல் அதீதமான தொண்டை வறட்சியை இவர்கள் சந்திக்கிறார்கள். இதற்கு அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
சூயிங் கம்மும் நல்லது. அதேசமயம், டாக்டரிடம் அணுகி சர்க்கரை நோய் அறிகுறிகள் தென்படுகிறதா, ஃப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருக்கிறீர்களா என்பதை அறிந்து உரிய சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பது சிறந்தது.
நீர்ச்சத்து குறைதல்
டைப் 2 சர்க்கரை வியாதி வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையும். அதிக அளவில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. தலைவலி, தலை சுற்றுதல், உடல் நடுக்கம், சோர்வு, சிறுநீர் கருமை நிறத்தில் வருதல், வறண்டு போன கண்கள் ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.

முக்கிய குறிப்பு
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனே சர்க்கரை வியாதி வந்துவிட்டது என்று நினைத்து பயம் வேண்டாம்.
தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.