சர்க்கரை நோயாளர்களே.. தூங்கும் முன் இந்த விடயங்களை மறந்தும் பண்ணிறாதீங்க - ஆபத்து நிச்சயம்!
தற்போது நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோய்க்கான கிளீனிக்குகள், மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு இருப்பதற்கு என்ன காரணம்? சர்க்கரை வியாதி அதிகரிப்பதற்கான சரியான மருத்தவ விளக்கம் என்ன? என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் எழும்.
அந்த வகையில், சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும் பழக்கங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. இரவு நேரத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கான காரணம்?
இரவு நேரங்களில் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால் வலிப்பு, இறப்பு கூட ஏற்படலாம். இதனை தடுக்க வேண்டும் என்றால் நாம் மருத்துவர்களின் கூற்றின்படி செயற்பட வேண்டும்.
மருத்துவ குறிப்புகள்
1. இரவு உணவை தவிர்க்கக்கூடாது..
டயாபடீஸ் நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த ஏதாவது வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இரவு நேரங்களில் உணவை தவிர்க்கக்கூடாது.
இது ரத்த சர்க்கரை அளவு குறைய வழிவகுக்கலாம். ஆகவே தினமும் மூன்று வேளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
2. இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது..
வேலையில் இருப்பவர்கள் காலை மற்றும் பகல் வேளைகளில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காததால் இரவு நேரங்களில் செய்வார்கள். இந்த பழக்கம் சர்க்கரை வியாதியுள்ளவர்களை அதிகம் பாதிக்கின்றது. அப்படி செய்தால் தான் தூக்கம் வரும் என்றால் உடற்பயிற்சி செய்து இரண்டு மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்வது சிறந்தாக இருக்கும்.
3. மது குடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும்.
பொதுவாக சர்க்கரை நோயாளர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவதால் அவர்களுக்கு ஹைப்போகிளைசிமியாவை ஏற்படுத்தும். அத்துடன் குறிப்பிட்ட ஒரு நாளில் மது எடுத்து கொள்வது சிறந்தாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |