சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள்
சிறுநீரகங்களை நாம் சுத்தமாக வைப்பது அவசியம். எனவே இயற்கையான வழியில் எப்படி சிறுநீரகங்களை சுத்தம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சிறுநீரகங்களை சுத்தப்படுதல்
உடலில் மிகவும் முக்கிய உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
ஒருவர் ஒருநாளைய்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு சிறுநீர் உற்பத்தி குறைகிறது. சிறுநீர் உற்பத்தி உடலில் குறையும் போது நமக்கு சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, உங்கள் சிறுநீரகங்களை தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம். இதை வீட்டிலேயே நாம் சுத்தப்படுத்தலாம் அதற்கு நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை அன்றாடம் சேர்த்து உண்ணுதல் வேண்டும்.

இயற்கை வழிகள்
ஆப்பிள் சீடர் வினிகர் - ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரகங்களில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் குணம் கொண்டது. இதை உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்த சக்கரை கட்டுக்குள் இருக்கும்.
மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரகங்களிலிருந்து நச்சுகளை வெளியேற்றும்.
சிவப்பு பீன்ஸ் - சிறுநீரக நோயாளிகள் தங்கள் உணவில் சிவப்பு பீன்ஸை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
இதில் வைட்டமின் பி, நார்ச்சத்து சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி, சிறுநீர்ப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

எலுமிச்சை நீர் - உலுமிச்சை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கை வழி.
இது சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரித்து, சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
இது இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரகத்தை பாதுகாக்கும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள், எலுமிச்சையை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து குடிக்கலாம்.

தர்பூசணி - தினசரி உணவில் தர்பூசணியைச் சேர்த்துக் கொள்வது அவசியம். இது குடல் இயக்கத்தை அதிகரித்து, சிறுநீரகங்களுக்கு நீர்ச்சத்தை அளித்து அவற்றைச் சுத்தப்படுத்துகிறது.
தர்பூசணியில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லைக்கோபீன் அதிக அளவில் உள்ளது. மேலும், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டைப் பராமரிக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |