சுகரை ஏற விடாமல் கைக்குள் வைத்துக்கொள்ளும் சில உணவுகள்! இனி கவலை இருக்காது
பொதுவாக தற்போது அதிகரித்து வரும் நோய்களில் சக்கரை நோய் முதல் இடத்தை பிடிக்கிறது.
தற்போது 40 கடக்கும் போதே சிறிய பயம் ஒன்று வருகிறது, காரணம் என்ன தெரியுமா? இந்த சக்கரை நோய் தான். சுமார் 40 மேற்பட்டவர்களில் 50 சதவீதமானவருக்கு சக்கரை நோய் இருக்கிறது.
இதனால் அவர்கள் நினைத்த உணவை சாப்பிட முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆனால், சக்கரை நோய் என்பதும் மற்றைய நோய்களை போல் ஓர் சாதாரண வியாதி தான் என்றும் அதற்கு சில பொருட்களை தவிர்த்தால் மட்டும் போதும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இதன்படி, சக்கரை நோய் உள்ளவர்கள் என்ன மாதிரியான பொருட்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சக்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
1. பாகற்காய்
காய்கறிகளில் மிகவும் கசப்புச் சுவைக் கொண்ட பாகற்காயில் கீரை விட கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் அதிகம் இருக்கிறது. ஆனால் இதன் கசப்புச் சுவையால் யாரும் பெரியதாக விரும்பவதில்லை. இது இன்சுலின் சுரப்பையை கட்டுக்குள் வைக்கிறது. எனவே தாராளமாக பாகற்காய் தினமும் சாப்பிடலாம்.
2. மஞ்சள்
சக்கரை நோயாளர்கள் மஞ்சள் சேர்த்து கொள்வது ஆபத்து என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் சக்கரை நோயாளர்கள் மஞ்சள் கலந்த உணவுகளை உட்க் கொள்ளலாம். காரணம் மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, டைப் 2 சக்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கிறது.
3. நார்ச்சத்து அதிகம் உணவு
நார்ச்சத்துக்கள் கொண்ட காய்கறிகள், பழங்கள் சக்கரை நோயாளர்கள் சாப்பிடுவது அவசியம். காரணம் என்ன தெரியுமா? நார்ச்சத்துக்கள் இரைப்பையில் இருக்கும் உணவுகள் சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதை தடுக்கிறது. இதனால் உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.
4. பட்டை
பிரியாணி உட்பட ரசம், குழம்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளுக்கு வாசனைக்காக சேர்க்கப்படும் வாசனைப் பொருள் தான் பட்டை. இந்த பட்டை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் உடலிலிருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. இதனால் சக்கரை நோயாளர்கள் சாப்பிடுவது நல்லது. மேலும் பட்டை இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். இதனால் டைப் 2 சக்கரையை கட்டுக்குள் வைக்கிறது.
5. நட்ஸ்
நட்ஸ்கள் எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. இது எமக்கு எண்ணற்ற நன்மைகளை செய்வதுடன், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து விடுகிறது, மேலும் இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்துகிறது.