போட்டிக்கு முன்பு பேட்டை கடிக்கும் தோனி - இரகசிய காரணத்தை கூறிய முன்னாள் வீரர்!
ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் டெல்லி அணியுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இனி வரும் போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என ஆவலில் உள்ளனர்.
என்னதான் சென்னை அணி வெற்றி பெற்றாலும், இந்த முறை ப்ளே ஆஃப் செல்லவது கடினம்தான். இந்நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது, தோனி பேட்டிங் இறங்குவதற்கு முன்பு தோனி தனது பேட்டை கடித்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக நேற்றைய போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்பும் தோனி பல போட்டிகளில் இதை செய்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
கழட்டிவிடப்பட்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக புதிய சாதனையை படைத்த வார்னர்

இதுகுறித்து முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவிக்கையில், தோனி தனது பேட்டை அடிக்கடி கடிப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
அதற்கு காரணம் அவரின் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஏதேனும் வெளியே வந்திருந்தால் அதனை அவர் எடுப்பதற்காக அவ்வாறு செய்வார்.
அவருக்கு அவரது பேட் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால், தான் தோனி பேட்டிங் செய்கையில் ஒரு நூல் அல்லது டேப் கூட அவரின் பேட்டில் இருந்து வந்ததே இல்லை என தெரிவித்து இருக்கிறார்.
In case you’re wondering why Dhoni often ‘eats’ his bat. He does that to remove tape of the bat as he likes his bat to be clean. You won’t see a single piece of tape or thread coming out of MS’s bat. #CSKvDC #TATAIPL2022
— Amit Mishra (@MishiAmit) May 8, 2022